காரைக்குடி: நாடு பிரதமரோடு இருப்பதை நாம் நேற்று (ஏப்.,5) காண முடிந்தது என பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
நாட்டிலிருந்து கொரோனாவை விரட்ட அனைவரும் ஒன்றாக இருப்பதை மெய்ப்பிக்க, நாட்டு மக்கள் அனைவரும் நேற்று இரவு 9 மணி முதல் 9.09 வரை விளக்கேற்றி வழிப்பட்டனர். பிரதமர் மோடியும் நாட்டு மக்களுடன் இணைந்து குத்து விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்தார்.
இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து டுவிட்டரில் எச்.ராஜா பதிவிட்டுள்ளதாவது: நாடு பிரதமரோடு என்பதை நேற்று காணமுடிந்தது. மிகவும் முன்னேறிய நாடுகளில் (அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்) படும் பாட்டை பார்க்கையில், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் எடுத்துள்ள படிப்படியான நடவடிக்கைகள் நாட்டை பெருமளவு பாதுகாத்து வருகின்றது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நாடு பிரதமரோடு இருப்பதை காண்கிறோம்: எச்.ராஜா